எஸ்.பி எம்.டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, கிரீன் பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் ராணி சட்ட ஆலோசகர் செந்தில்குமார் ஆசிரியர் ஆறுமுகம், திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மனோஜ்குமார், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சரவணன், முன்னாள் இராணுவ வீரர் நரசிம்மராஜ், சமூக ஆர்வலர் சண்முகம், உட்பட பலர் கலந்துகொண்டரை. மேலும், கிரீன் பவுண்டேசன் நிறுவனர் கூறியதாவது:

தமிழக முதல்வரின் உன்னதமான பசுமை தமிழகம் திட்டத்தை காரியாபட்டி வட்டாரத்தில் முழுமையாக செயல்படுதத்தப்படும். பேரூராட்சித் தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ஒத்துழைப்போடு வாரம் ஒரு நாள் விடுமுறை தினத்தன்று வீடுகள் தோறும் மக்களை நேரில் சந்தித்து மரக்கன்றுகள் வழங்கப்படும்.
பொதுமக்கள் கேட்கும் விருப்பமுள்ள கொய்யா, மாதுளை பப்பாளி மற்றும் மூலிகை செடிகள், வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், வீடுகளில் வழங்கும் மரங்களை சிறந்த முறையில் பராமரிக்கும் இல்லத்தரசிகளுக்கு பரிசுகள் வழங்கப் படும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment