தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம் யாதவர் பெண்கள் கலைக் கல்லூரியில் 1344 மகளிர் சுய உதவி குழுக்கள், 81 கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மொத்தம் ரூ.98.30 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட மகளிர் திட்டம் திட்ட அலுவலர் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment