காரியாபட்டியில், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 106 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 24 January 2023

காரியாபட்டியில், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 106 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.

காரியாபட்டியில்  அதிமுக பொதுக்குழுக்   கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் , காரியாபட்டி ஒன்றிய அதிமுக சார்பாக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 10வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர்    ராமமூர்த்தி ராஜ் ,கிழக்கு ஒன்றியச் கழகச் செயலாளர் தோப்பூர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

பொதுக்குழு பழனி உறுப்பினர் வரவேற்றார், ஒன்றிய கழகச் செயலாளர்கள்  அம்மன்பட்டி ரவிச்சந்திரன், முத்து ராமலிங்கம் , முனியாண்டி  ,அம்மன் பட்டி ரவிச்சந்திரன், பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கிழக்கு மாவட்டச்  செயலாளர் ரவிச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார் .


மாவட்ட கழக அவைத்தலைவர் ஜெயபெருமாள், மாநில சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் சித்திக், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு துணைத் தலைவர் வீரேசன்,  மாவட்ட கழக பொருளாளர் ரமாதேவி குருசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வேங்கை மார்பன், மாவட்ட அமைப்புசாரா அமைப்பாளர் ரவி, கவுன்சிலர்கள் திருச் செல்வம், நாகபாண்டீஸ்வரி, காரியாபட்டி ஒன்றிய துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், நகரச் செயலாளர் விஜயன்  பேரூராட்சி கவுன்சிலர்கள் திருச்சுழி நகர செயலாளர் பாலமுருகன், அண்ணா தொழிற்சங்க செல்வகுமார், நகர எம்.ஜிஆர் மன்ற செயலாளர் பாண்டியராஜன், இளைஞர் பாசறை செயலாளர் ராஜேந்திரன் , உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad