சாத்தூர் அருகே, ஓடையில் கிடந்த பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறியதில், பள்ளி மாணவர்கள் இருவர் படுகாயம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 3 January 2023

சாத்தூர் அருகே, ஓடையில் கிடந்த பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறியதில், பள்ளி மாணவர்கள் இருவர் படுகாயம்.


விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள தாயில்பட்டி, கலைஞர் காலனியைச் சேர்ந்தவர்கள் வைரவன் (14), வேலாயுதம் (9). பள்ளி மாணவர்களான இவர்கள் இருவரும், அந்தப் பகுதியில் உள்ள ஓடைப் பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது, எதிர்பாராத விதமாக, ஓடையில் வீசப்பட்டிருந்த பட்டாசு ஆலை கழிவுகளில் தீப்பிடித்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் சிக்கிய மாணவர்களின் உடலில் தீக்காயம் ஏற்பட்டு படுகாயமடைந்தனர். உடனடியாக, அருகில் இருந்தவர்கள் சிறுவர்கள் இருவரையும் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தீக்காய சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 


ஓடையில் பட்டாசு கழிவுகளை யார் கொட்டியது, இல்லையென்றால் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் கழிவுகளை கொட்டினார்களா என்று, வெம்பக்கோட்டை காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad