காரியாபட்டி அருகே எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா; பெண்குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 20 January 2023

காரியாபட்டி அருகே எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா; பெண்குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டது.


முன்னாள் முதலைச் சர் எம்ஜிஆரின் 106 -வது பிறந்தநாள் விழா மல்லாங்கிணறு அருகே முடியனுர் கிராமத்தில் நடைபெற்றது. காரியாபட்டி அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் ராமமூர்த்திராஜ் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றியச் செயலாளர் தோப்பூர் முருகன் முன்னிலை வகித்தார்.

விழாவில், முடியனூர் கிளைக்கழக செயலாளர் பிரகலநாதன் சார்பாக 2022  ஆண்டு  பிறந்த 10 பெண் குழந்தைகளுக்கு முடியனூர் வார்டு  செயலாளர் பிரகலாதன் 10 பெண் குழந்தைகளுக்கு தலா 2 கிராம் வீதம் மொத்தம் 20 கிராம் தங்கம் மோதிரமும் . பெண் குழந்தைகளின் வைப்பு தொகையாக ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்பட்டது. மல்லாங்கிணறு நகர அதிமுக செயலாளர் அழகர்சாமி, நகர அம்மா பேரவை செயலாளர் மணிராஜ், காரியாபட்டி ஒன்றிய அவைத் தலைவர் இந்திரா கிருஷ்ணன், மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள் கிளைக் கழக செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad