புறவழிச் சாலை பூமிபூஜை விழா மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பூமிபூஜை விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது, அருப்புக்கோட்டை - விருதுநகர் புறவழிச்சாலை அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் விலக்கில் துவங்கி, அங்கிருந்து வலது பக்கமாக சென்று, திருவில்லிபுத்தூர் - பார்த்திபனூர் சாலையின் குறுக்காகச் சென்று, சுக்கிலநத்தம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கப்படுகிறது.

இந்த புறவழிச்சாலையின் தூரம் 10 கிலோ மீட்டராக இருக்கும். சுமார் 134 கோடி ரூபாய் செலவில் இந்த புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த புறவழிச்சாலை முடிவு பெறும் போது அருப்புக்கோட்டை நகர் பகுதியிலும், மதுரை - தூத்துக்குடி சாலையிலும் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்று கூறினார்.
No comments:
Post a Comment