ராஜபாளையத்தில், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 8 January 2023

ராஜபாளையத்தில், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக் வான் டோ சேம்பியன்ஷிப் போட்டிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 250 பேர் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே முதுகுடியில் செயல்படும் தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான டேக் வான் டோ சேம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெற்றது. 


இந்த போட்டிகளில், விருதுநகர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட 250 பேர் கலந்து கொண்டனர். நாக்அவுட் முறையில், இரண்டு ஆட்டக் களங்களில் நடைபெற்ற போட்டிகளை மூத்த பயிற்சியாளர்கள் தொடங்கி வைத்தனர்.


இதில், 7, 11, 14, 17 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டிகள் 70 எடை பிரிவுகளில் தனித் தனியாக நடத்தப்பட்டது. ஆண்கள், பெண்களுக்கான போட்டிகள் 200 சுற்றுக்களாக நடத்தப்பட்டது. 


இன்று நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள், வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் திண்டுக்கலில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். மற்ற வயது பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் பிப்ரவரி மாதம் 4 முதல் 6 ம் தேதி வரை திண்டுக்கலில் நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad