விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, மான், மிளா, குரங்கு, சாம்பல் நிற அணில் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது. மேலும் இந்தப்பகுதி மேகமலை புலிகள் காப்பக பகுதியாகவும் அறிவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள பந்தப்பாறை வனப்பகுதியில், சிலர் மயில் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக வனத்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை செய்தனர். அப்போது, மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வம் (28) சரவணக்குமார் (30) ஆகிய இருவரும் ஒரு சாக்குப் பையில் மூன்று மயில்களை வேட்டையாடி கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வனப்பகுதியில் புகுந்து மயில்களை வேட்டையாடிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment