விருதுநகர் நான்கு வழிச்சாலை வழியாக, தமிழ்நாடு முதலமைச்சர் பயணம் செல்ல இருப்பதால், 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விருதுநகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை 6ம் தேதி (திங்கள் கிழமை) மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கும், நாளை மறுநாள் 7ம் தேதி (செவ்வாய் கிழமை) திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கும் விருதுநகர் வழியாக, நான்கு வழச்சாலையில் பயணம் செல்ல இருக்கிறார். எனவே மதுரை - திருநெல்வேலி நான்கு வழிச்சாலை மற்றும் முதல்வர் செல்லும் பகுதிகள், தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், முதல்வர் பயணம் செல்ல இருக்கும் இந்த இரண்டு நாட்களும், நான்கு வழிச்சாலையில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment