சிவகாசி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் மாசி பொங்கல் திருவிழா கோலாகலம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 8 March 2023

சிவகாசி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் மாசி பொங்கல் திருவிழா கோலாகலம்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, மாநகராட்சி அண்ணா காய்கறி மார்க்கெட் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மாசி பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் ஸ்ரீமுத்துமாரியம்மன், கையில் அக்கினிச்சட்டி ஏந்தி வருவது போல சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இரவு, ஸ்ரீவிஸ்வநாதர், ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றன. 


பின்னர் ஸ்ரீமுத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் ஊர்வலம் வந்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad