ஏப்ரல் 7 உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, காரியாபட்டி அரசு மருத்துவமனை மற்றும் எஸ்.பி.எம். டிரஸ்ட் சார்பில், உலக சுகாதார தின நிகழ்வு அரசு மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.
நிகழ்விற்கு, டாக்டர் சின்னக்கருப்பன் தலைமை தாங்கினார். டாக்டர் கார்த்திகா முன்னிலை வைத்தார். எஸ். பி .எம் .டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி வரவேற்புரை வழங்கினார், நிகழ்வில், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் மாமல்லன், சுகாதாரம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கி அனைவரிடத்திலும் சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்படுத்தித் தந்தார்.
நிகழ்வில், சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர் , ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவ குமார் ,கிரீன் பவுண்டேஷன் நிறுவனர் பொன் ராம் மற்றும் நோயாளிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment