சிவகாசி, ஸ்ரீமாரியம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளினார். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 4 April 2023

சிவகாசி, ஸ்ரீமாரியம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளினார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமாரியம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

தினமும் அதிகாலையில் ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்று வருகின்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளும் அம்மன், வீதியுலாவாக வந்து, கடைக்கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 


திருவிழா ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு, தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad