விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில் வசித்து வந்த, அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை தவசிலிங்கம், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். முன்னாள் அமைச்சரை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

திருத்தங்கல்லில் இன்று நன்பகல், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வீட்டிற்கு, முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் திடீரென்று வருகை தந்து, கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார். பின்னர் ராஜேந்திரபாலாஜியின் உறவினர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆறுதல் கூறினார். உடன் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
No comments:
Post a Comment