மல்லாங்கிணறு பேரூராட்சியில், அங்கன் வாடி குழந்தைகளுக்கான சுகாதார வளாகத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்தார் - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 6 April 2023

மல்லாங்கிணறு பேரூராட்சியில், அங்கன் வாடி குழந்தைகளுக்கான சுகாதார வளாகத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்தார்

மல்லாங்கிணறில் பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார வளாகம் அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்தார். பாண்டிச்சேரியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சாணி டேசன் பர்ஸ்ட் நிறுவனம், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் தோறும் தரம் உயர்த்தப்பட்ட மாசுபாடற்ற கழிப்பறை கட்டிடங்களை அமைத்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி பகுதியில் திருச்சுழி ஸ்பீச் நிறுவனத்துடன் இணைந்து பள்ளிகள் தோறும் கழிப்பறைகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் முதன்முறையாக நவீன முறையில் மல்லாங்கிணறு அரசு பள்ளி அருகே கட்டப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் தங்கம் தென்னரசு பள்ளி குழந்தைகள் முன்னிலையில் கட்டிடத்தை திறந்து வைத்தார். 


மல்லாங்கிணறு  பேரூராட்சித் தலைவர் துளசி, தாஸன், துணைத்தலைவர் மிக்கேல் அம்மாள், காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் செந்தில், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், சானிடேஷன் நிறுவன தலைமை செயல் அதிகாரி பத்மபிரியா, நிஷா கேசவன் ஸ்பீச் திட்ட இயக்குனர் சமுதன், நிதி இயக்குனர் செல்லம், மக்கள் தொடர்பாளர் பிச்சை. உட்பட பலர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad