விருதுநகர் மாவட்டத்தில், காணாமல் போன 150 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 10 May 2023

விருதுநகர் மாவட்டத்தில், காணாமல் போன 150 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு.


விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், பொதுமக்கள் தங்களது செல்போன்கள் திருடு போனது குறித்தும், காணாமல் போனது குறித்தும் காவல் நிலையங்கள் மற்றும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்கள் தெரிவித்திருந்தனர். 

புகார்கள் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, காணாமல் போன செல்போன்களை மீட்டனர். விருதுநகர் மாவட்ட காவல் கோட்டத்தில் ராஜபாளையம் 32, திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநநகர் பகுதிகளில் தலா 20, அருப்புக்கோட்டை பகுதியில் 16 என்பது உட்பட 150 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். மீட்கப்பட்ட செல்போன்களின் மதிப்பு சுமார் 23 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. காணாமல் போன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் தலைமையில் நடைபெற்றது. 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செல்போன் உரிமையாளர்கள் 150 பேர்களிடம் செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் மற்றும் காவல்துறை அதிகாரிகள், தனிப்படை மற்றும் சைபர் கிரைம் போலீசார் இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad