விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதிகளில், பட்டாசுகளுக்கு தேவையான கருந்திரிகள் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் உமாமாலினி தலைமையி்ல், எம்.டி.ஆர்.நகர் பகுதியல் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த வீரப்பன் (55) என்பவர், தனது வீட்டின் அருகே எந்தவிதமான அனுமதியும் பெறாமல் சட்ட விரோதமாக செட் அமைத்து பட்டாசுக்கு தேவையான கருந்திரிகளை தயாரித்து பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.


அங்கிருந்த 50 குரோஸ் கருந்திரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், கருந்திரிகளை தயாரித்து பதுக்கி வைத்திருந்த வீரப்பனை கைது செய்தனர்.
No comments:
Post a Comment