விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.


குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சாந்தி தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் விசாரணையில் சிறுமி பாதிக்கப்பட்டது தெரிய வந்ததால், அலுவலர் சாந்தி இது குறித்து சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மாரிமுத்துவை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
No comments:
Post a Comment