விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், வலுக்கலொட்டி ஊராட்சியில் 15வது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.7 இலட்சம் மதிப்பில் பெண்கள் சமுதாய கழிப்பிடம் கட்டப்பட உள்ள இடத்தினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.97 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை அமைத்தல் பணிகளையும், நாகம்பட்டி கிராமத்தில் 15ஆவது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.3 இலட்சம் மதிப்பில் வாறுகால் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் ரூ.11.32 இலட்சம் மதிப்பில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள பணிகளையும், அழகியநல்லூர் ஊராட்சி கோப்பிலிங்கம்பட்டி கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் ரூ.13.65 இலட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வரும் பணிகளையும், பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.73.79 இலட்சம் மதிப்பில் மாந்தோப்பு - அழகியநல்லூர் முதல் கோப்புலிங்கம்பட்டி வரையிலான சாலை பணிகள் நடைபெற்று வருவதையும், அழகிய நல்லூர் கிராமத்தில் 15வது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ. 2.90 இலட்சம் மதிப்பில் வாறுகால் கட்டப்பட்டுள்ளதையும், ஆதிதிராவிடர் காலணியில் ரூ.4.899 இலட்சம் மதிப்பில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், அழகிய நல்லூர் தெருவில் 15வது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.3 இலட்சம் மதிப்பில் வாறுகால் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள இடத்தினையும், பிசிண்டி ஊராட்சி அச்சங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.8.29 இலட்சம் மதிப்பில் சமையலறை கூடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, உதவி பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment