விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (32). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள ராம்குமார், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி அலறியதால் ராம்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர் ராம்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.


No comments:
Post a Comment