திருச்சுழி அருகே, குடும்பத் தகராறை தட்டிக் கேட்ட பெண்ணிற்கு அரிவாள் வெட்டு; குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 16 September 2023

திருச்சுழி அருகே, குடும்பத் தகராறை தட்டிக் கேட்ட பெண்ணிற்கு அரிவாள் வெட்டு; குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள கட்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் (38). கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம். கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தங்கம் வழக்கம் போல தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் வசிக்கும் தங்கத்தின் உறவினரான பஞ்சவர்ணம் (35) இதனை தட்டிக் கேட்டு, தங்கத்தை கண்டித்துள்ளார். 


இதனால் ஆத்திரமடைந்த தங்கம், பஞ்சவர்ணத்தை திடீரென்று அரிவாளால் சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த பஞ்சவர்ணத்தை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து பஞ்சவர்ணத்தின் கணவர் நாகராஜ், கட்டணூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்குபதிவு செய்த போலீசார் தங்கத்தை கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், குற்றவாளி தங்கத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad