சிவகாசி அருகே, கண்மாயை ஆக்கிரமிப்பு செய்ய நினைக்கும் தனியார் அமைப்பிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 September 2023

சிவகாசி அருகே, கண்மாயை ஆக்கிரமிப்பு செய்ய நினைக்கும் தனியார் அமைப்பிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் உள்ளது உறிஞ்சிக்குளம் கண்மாய். சுமார் 41 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த உறிஞ்சிக்குளம் கண்மாய், இதனை சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதராமாக உள்ளது. 


இந்த நிலையில், சிவகாசி பகுதியைச் சேர்ந்த பசுமை இயக்கம் என்ற தனியார் அமைப்பு ஒன்று, கண்மாய் கரைகளில் மரம் நடப்போவாதாக கூறி, கண்மாயின் கரைகளில் சுமார் 15 அடி அகலத்திற்கு மணல் பரப்பும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். கண்மாய் பகுதியில் மரம் நடுவதற்காக வருவாய்த்துறை உள்ளிட்ட எந்த அரசு நிர்வாகத்திடமும் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனையறிந்த அந்தப் பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து, கண்மாய்க்குள் வேலை செய்து கொண்டிருந்தவர்களுடன் வாக்குவாதம் செய்து பணிகளை நிறுத்துமாறு கூறினர். 


இது குறித்து, தகவலறிந்த திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, கண்மாய்க்குள் வேலை செய்து கொண்டிருந்த பணியாட்கள் மற்றும் மண் அள்ளும் எந்திரங்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் ,அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad