விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அய்யனார் கோவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு, இராஜபாளையத்தில் இருந்தும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அய்யனார் கோவிலில் குளித்து விட்டு வழிபடுவதற்கும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. அதுமட்டும் சிவானந்த குருகுலம் சார்பில் அங்குள்ள மடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளிப்பதற்கு பக்தர்கள் தடை விதித்த வனத்துறையினர் அய்யனார் கோவில் சென்று சாமி தரிசனம் செய்வதற்கும் தடை விதித்தனர்.
இதனால், சாமி கும்பிட வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் சாலையிலேயே தேங்காய் பழங்களை உடைத்தும் விளக்குகள் ஏற்றியும் வழிபட்டு சென்றனர். மேலும், ஆற்றில் நீர் அதிகரித்து வருவதால் காவல்துறை பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர், ஆபத்தை உணராமல் எஸ் வளைவு கருவாட்டு பாறை போன்ற பகுதிகளில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment