காரியாபட்டி பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 5 November 2023

காரியாபட்டி பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் .குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், 'நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம்,  காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


காரியாபட்டி பேரூராட்சியில், 15-வது மானிய நிதிக்குழுவின் கீழ் 1-வது வார்டில் ரூ.9.57 இலட்சம் மதிப்பில் வாணிச்சி ஊரணி மேம்பாடு மற்றும் பொதுமக்கள் நடைபயிற்சி பாதை அமைக்கும் பணிகளையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் காரியாபட்டி பேருந்து நிலையத்தில் ரூ.168 இலட்சம் மதிப்பில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, பேரூராட்சித் தலைவர் செந்தில், பேரூராட்சிகளின், உதவி இயக்குநர்  சேதுராமன், செயல் அலுவலர் அன்பழகன், பொறியாளர் கணேசன், பேரூராட்சி உறுப்பினர்கள் சங்கரேஸ்வரன், சரஸ்வதி பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad