இராஜபாளையம் அருகேசொக்கநாதன் புத்தூர் பகுதியில் ஊராட்சி செயலர் நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 2 November 2023

இராஜபாளையம் அருகேசொக்கநாதன் புத்தூர் பகுதியில் ஊராட்சி செயலர் நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு.


விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே, சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில், ஊராட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கிராமசபை கூட்டத்திற்கு, பொதுமக்களுக்கு முறையான அழைப்பு கொடுக்கவில்லை எனக் கூறி, ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி கடல் கனி  மற்றும் துணைத் தலைவருக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும், ஊராட்சி செயலர் முறையான தகவல் தெரிவிக்காமல், தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறி அப்பகுதி பொதுமக்களும் வார்டு உறுப்பினர்களும் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

மேலும், கிராமசபை கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரவில்லை  முக்கியமான குடிநீர் பிரச்சினை கூட தீர்வு கிடைக்கவில்லை என கூறி, ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி கடல் கனியிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த பொழுது, ஊராட்சி செயலர் தீர்மானம் நோட்டில் கையெழுத்து வாங்க முயன்றதால், வாக்குவாதம் ஏற்பட்டு பொதுமக்கள் அனைவரும் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். காவல்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர்.


அப்பகுதி மக்கள்  உடனடியாக இந்த ஊராட்சி மன்ற செயலாளர் சீமானை, மாற்ற வேண்டும் கடந்த 15 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார் என குற்றச்சாட்டு கூறினர்.

No comments:

Post a Comment

Post Top Ad