விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் பலசரக்கு வர்த்தக மகமைப்பண்டுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுருகன் கோவிலில், கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீமுருகன் - ஸ்ரீதெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி, நேற்றிரவு வெகு கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான சீர்வரிசைப் பொருட்களை பக்தர்கள் வழங்கினர். சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகளுடன், பக்தர்கள் புடைசூழ, ஸ்ரீமுருகன் - ஸ்ரீதெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் திருக்கல்யாண விருந்தும், பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
இன்று இரவு, ஸ்ரீமுருகப்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சிவகாசி இந்து நாடார்கள் பலசரக்கு வர்த்தக மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment