மல்லாங்கிணறு பேரூராட்சி, சின்னக்குளம் ஊரணிக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரம்பியது அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு மகிழ்ச்சி. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 15 December 2023

மல்லாங்கிணறு பேரூராட்சி, சின்னக்குளம் ஊரணிக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரம்பியது அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு மகிழ்ச்சி.


விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சியில், சின்னக்குளம் ஊரணியை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தார். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சி மேலரதவீதியில் அமைந்துள்ள சின்னக்குளம் ஊரணியை பல ஆண்டுகளாக தூர்வாரப்பாமலும் நீர் நிரம்பாமலும் இருந்தது. பொது மக்களின் கோரிக்கையை ஏற்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவின் பேரில் , பல     ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரும் பணி செய்ய ரூ. 82.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  

இந்த நிதி மூலமாக ஊரணி தூர்வாரும் பணி, தடுப்புச்சுவர், பொதுமக்கள் நடை பாதை , மின் விளக்கு வசதிகளுடன் ஊரணி மேம்படுத்தும் பணி செய்து முடிக்கப் பட்டது.  இந்த ஊரணிக்கு, தண்ணீர் நீண்டகாலமாக நிரம்பாமல், இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் மல்லாங்கிணறு பெரிய கண்மாய் நிரம்பியது பெரிய கண்மாயிலிருந்து  சின்னக்குளம் ஊரணிக்கு தண்ணீர் வர வேண்டிய வரத்துக்கால்வாய்கள் மூடப்பட்டு தூர்வாராமல் இருந்தது.


இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் எடுத்த தீவிர முயற்சி யால் வரத்துக் கால்வாய்கள் தூர்வாரும் பணி செய்யப் பட்டு பெரிய கண்மாயிலிருந்து சின்னக்குளம் ஊரணிக்கு தண்ணீர் கொண்டு    வரப்பட்டது.  தற்போது, சின்னக்குளம் கண்மாய்க்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு நீர் நிரம்பியதை பார்த்துயொட்டி,  மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.


நீர் நிரம்பிய சின்னக்குளம் ஊரணியை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு  மகிழ்ச்சி அடைந்தார். அப்போது, பேரூராட்சி தலைவர் துளசி  தாஸ், செயல் அலுவலர் அன்பழகன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர்  ஜெயச்சந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad