திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள், தங்கத்தால் ஆன திருப்பாவை பட்டுடன் எழுந்தருளினார். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 16 December 2023

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள், தங்கத்தால் ஆன திருப்பாவை பட்டுடன் எழுந்தருளினார்.


விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி நீராட்ட உற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாளை மார்கழி மாதம் பிறப்பதை முன்னிட்டு, நேற்றிரவு ஸ்ரீஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் அனுசரித்த பாவை நோன்பு விரதத்தை கொண்டாடும் வகையில், மார்கழி நீராட்ட உற்சவம் சிறப்பாக நடைபெறும். 

பகல் பத்து உற்சவத்தின் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியான, ஸ்ரீஆண்டாள் நாச்சியார் தங்கத்தால் இழைக்கப்பட்ட திருப்பாவை பட்டுடுத்தி, ஸ்ரீரெங்கமன்னார் சுவாமியுடன் பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளினார். இதனையடுத்து ஸ்ரீபெரிய பெருமாள் சுவாமி, ஸ்ரீதேவி - ஸ்ரீபூதேவியுடன் எழுந்தருளினார். மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன. மார்கழி மாதப் பிறப்பு தமிழ் பஞ்சாக்கத்தின் படி இன்று இரவு பிறக்கின்றது. இதனை முன்னிட்டு இன்று இரவு ஸ்ரீஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 


மார்கழி மாதத்தின் சிறப்பு வாய்ந்த பரமபதம் என்ற சொர்க்க வாசல் திறப்பு வைகுண்ட ஏகாதசி திருவிழா, வரும் 23ம் தேதி (சனி கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5.30 மணியளவில் பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad