பூட்டி கிடக்கும் நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 8 January 2024

பூட்டி கிடக்கும் நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவுக்கு உட்பட்ட   மகாராஜபுரம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ,அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகம் இயங்கி வந்தது. இந்த நூலகத்தில் மகாராஜபுரம் கிராமத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நூலகத்திற்கு சென்று படித்து பயன் பெற்று வந்தனர்.

இந்நிலையில்  நீண்ட நாட்களாக இந்த நூலகம் பூட்டி கிடக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். மேலும் நூலக கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து  மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும் 4000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் உள்ள மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை வளர்த்து கொள்ள நூலகம் மிக அவசியமானதாகும். 


மேலும் நூலகத்தில் சென்று கல்விக்கு தேவையான ஏதாவது படிக்க வேண்டும் என்றால் மாணவர்கள் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வத்திராயிருப்பில் உள்ள நூலகத்தில் சென்று தான் படிக்க வேண்டிய நிலைமை உள்ளது என்கின்றனர், மேலும் மகாராஜபுரத்தில் உள்ள நூலகத்தை பல நாட்களாக திறக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தும்  இந்நாள் வரை அதை திறக்காமல் பூட்டியே கிடைக்கின்றது.


இந்நிலையில்  நூலகத்தை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராஜபுரம்  கிராமத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad