மேலும் 25 ஆண்டுகளுக்கு மேலாக கடந்த வந்த நிலையில் தற்போது அங்கன்வாடி மையம் கட்டிடத்தின் மேற்குறை பல இடங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ளன மேலும் பல இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் அடிக்கடி உடைந்து கீழே விழுவதாக கூறப்படுகின்றன . அங்கன்வாடி வெளிப்புறத்தில் பல இடங்களில் சுவர்கள் சேதமடைந்த நிலையில் உடைந்து காணப்படுகிறது இதனால் குழந்தைகளை அந்த கட்டிடத்தில் ஆரம்ப நிலை கல்வி கற்பதற்கு பாதுகாப்பற்றதாய் காணப்படுகிறது மேலும் மழைக்காலங்களில் மழைநீர் அங்கன்வாடி மையத்திற்குள் வருவதால் குழந்தைகள் உள்ளே சென்று பாடம் படிப்பதற்கு மிக மோசமான நிலை உள்ளது என்று பிள்ளைகளின் பெற்றோர்கள் கூறப்படுகின்றனர்.
இதனால் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டதாகவும் இதனால் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கிறது என்று கூறப்படுகின்றனர்.
அங்கன்வாடி கட்டிடத்தை முற்றிலும் இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் பலமுறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் பல ஆண்டுகளாக அந்த கோரிக்கையை கிடைப்பிலேயே போட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றனர் இதனால் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதை நிறுத்திவிட்டோம் என்கிறார்கள் பெற்றோர்கள், மேலும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தை உடனே மாற்றினால் விபத்துகளை தடுக்க முடியும் எனவும் அங்கன்வாடிக்கு வரும் பிள்ளைகளுக்கு எந்த ஒரு விபத்தும் நிகழும் முன்னர் இந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment