விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுக்காவிற்குட்பட்ட அமலா தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி குல ஸ்ரீ அமிர்தவர்ஷினி., இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிலம்பம் பயின்று வருகிறார். இந்த நிலையில்., தேசிய அளவிலான சிலம்பப் போட்டி கடந்த 16-ஆம் தேதி உலக சிலம்ப தலைவர் சுதாகரன் தலைமையில் கோவாவில் நடைபெற்றது. இப்போட்டியில் ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவி குல ஸ்ரீ அமிர்தவர்ஷினி முதல் பரிசை தட்டிச் சென்றார்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து சிலம்ப போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. பரிசு பெற்ற மாணவிக்கு அப்பள்ளியை சேர்ந்த நிர்வாகிகள் மார்கெட் மேரி தலைமை ஆசிரியர் விக்டோரியா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மாணவியை வெகுவாக பாராட்டினர்.
No comments:
Post a Comment