விருதுநகர் மாவட்டம், சிவகாசி, சுப்ரமணிய காலனியைச் சேர்ந்த கருப்பசாமி (74). இவர், கள்ளநோட்டு வழக்கில், 2000ம் ஆண்டு சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றத்தால், 2007ல் 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்து, நீதிமன்ற ஆணைப்படி ஜாமீனில் வெளியே சென்ற கருப்பசாமி, 2020, டிசல் தண்டனை உறுதி செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பின், பிணைப்பத்திரம் வாயிலாக மீண்டும் வெளியே சென்ற கருப்பசாமி, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், உயர்நீதிமன்ற மதுரை கிளையால், மீண்டும் தண்டனை உறுதி செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கருப்பசாமி, சிறை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக கடந்த நவம்பர் மாதம், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, தொடர் சிகிச்சையில் இருந்த அவர், பலியானார். இது குறித்து, அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்..
No comments:
Post a Comment