தமிழக அரசின் இரண்டரை ஆண்டு காலம் சாதனைகள் மற்றும் 2024 ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் பற்றி பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்யும் வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார நிகழ்ச்சி நடத்த உத்தரவு பிறப்பித்து ள்ளார். விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், நிதி அமைச்ச ருமான தங்கம் தென்னரசுவின். ஆலோசனையின் பேரில், மல்லாங்கிணறில் நடந்த வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி காரியாபட்டி பேரூர் கழகம் சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப் பிரச்சார நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
காரியாபட்டி நகர செயலாளரும், பேரூராட்சித் தலைவருமான செந்தில் இல்லங்களுக்கு சென்று பொது மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி, பிரச்சார நிகழ்ச்சி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி கவுன்சிலர்கள், சங்கரேஸ்வரன், சரஸ்வதி பாண்டியன், தீபா, நாகஜோதி ராமகிருஷ்ணன் முத்துக்குமார், வார்டு செயலாளர்கள், முத்து முனியாண்டி, பூமிநாத சேதுபதி, சங்கரேஸ்வரி, ஜீவா, சக்திவேல், பழனி, மாரியப்பன், பட்டாணி, ராஜகோபால் கருப்பையா, சாய்பாபா, அஜிஸ் சின்ன ராஜா, குருசாமி, சர்க்கரை, மணிமாற பூபதி, காதியார். உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment