குழந்தைகளுக்கு நன்னெறி கதைகள் சொல்லி ஊக்கப்படுத்துங்கள் மாவட்ட கல்வி அலுவலர் பேச்சு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 6 February 2024

குழந்தைகளுக்கு நன்னெறி கதைகள் சொல்லி ஊக்கப்படுத்துங்கள் மாவட்ட கல்வி அலுவலர் பேச்சு.


குழந்தைகளுக்கு நன்னெறி கதைகளை சொல்லி ஊக்கப் படுத்துங்கள் என்று கல்வி அலுவலர பேசினார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி செயின்ட் மேரீஸ் பள்ளி 37-வது ஆண்டு விழா நடை பெற்றது. பள்ளி தாளாளர் கீதா தலைமை வகித்தார். முதல்வர் இமாகுலேட் ஆண்டறிக்கை வாசித்தார்.      


நிகழ்ச்சியில், தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பாக்கிய செல்வம் கலந்து கொண்டு, பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று  தேர்ச்சி  பெற்ற  மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது, அவர் பேசியதாவது: மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களை ஊக்கு விக்கும் வகையில் இது போன்ற ஆண்டு விழாக்கள் நடத்துவது வழக்கம்.  


விழாவில்,  நடைபெறும் கலை நிகழ்ச்சியில், பங்கேற்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அவர் அவரின் குழந்தைகளை மட்டும் தான் பார்த்து ரசிப்பார்கள் ஆனால், எல்லா குழந்தைகளையும் ஒரே நேரத்தில் கண்காணித்து ஊக்கப்படுத்தும் ஆசிரியர் களை நாம் பாராட்ட வேண்டும். பெற்றோர்கள் தினமும் குழந்தைகளை அழைத்து பேசுங்கள், கேள்வி கேட்கும் போது நல்ல முறையில் பதில் சொல்லுங்கள் குழந்தைகளுக்கு நன்னெறி கதைகளை சொல்லுங்கள். ஒவ்வொரு மாணவர்களுக்கு கண்டிப்பாக உடற்பயிற்சி அவசியம் வேண்டும். என்று பேசினார். நிகழ்ச்சியில், மாணவர் களின் கலை நிகழ்ச்சிகளி நடைபெற்றன. துணை முதல்வர் கயல்விழி நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad