ராஜபாளையம் நகரின் இரு வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அதிமுகவை சேர்ந்த மகளிர் அணியினர் கவுன்சிலர்கள் மாணவர் அணியினர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திமுக ஆட்சியில் அனைத்து இடங்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கிடைப்பதாகவும், தமிழ்நாடு போதைப்பொருள் மாநிலமாக மாறி விட்டதாகவும், போதைப்பொருள் மாஃபியாவோடு தொடர்பில் உள்ள ஆளும் கட்சியினரை கண்டிப்பதாகவும், கல்லூரி மாணவர்களை கஞ்சா மற்றும் போதை பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டும், தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதை பொருட்கள், வழிப்பறி உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் மக்கள் சிரமப்பட்டு வருவதாகவும், ஸ்டாலின் குடும்ப ஆட்சியில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும், குற்றச் செயல்களுக்கு துணை போகாமல் குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை மனித சங்கிலி போராட்டத்தின் போது அதிமுகவினர் எழுப்பினர்.
தமிழக அரசை கண்டித்து, ராஜபாளையத்தில் நான்கு இடங்களில் நடைபெற்ற மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் பரவி வரும் போதை பொருட்களை தடுக்க நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment