அருப்புக் கோட்டையில் பல்நோக்கு சமூக சேவா சங்கம் சார்பாக மகளிர் தின விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. அருப்புக்கோட்டை பல்நோக்கு சமூக சேவை மற்றும் விருதுநகர் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பல்நோக்கு சமூக சேவா சங்கம் சார்பாக உலக பெண்கள் தினம் விழா அருப்புக் கோட்டையில் நடை பெற்றது. விழாவை முன்னிட்டு விழிப்புணர் பேரணியை சமூக சேவா சங்க செயலாளர் கபிரியேல் தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு முன்னேற்றத்தின் மூலதனம் பெண்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் கெங்கா, அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பூமா சமூக ஆர்வலர் கவிதா குமாரி குருகுல ஒளி ஒருங்கிணைப்பாளர் இயற்கையம்மா பல்நோக்கு சமூக உதவி உதவியாளர்கள் ராசன், ஸ்டாலின் செயலாளர்கள் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள் விழா விளை பொருட்செல்வி ஞானம், ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.
No comments:
Post a Comment