ராஜபாளையத்தில் ஒரே பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்த வீடுகளில் 16 சவரன் தங்க நகை ரொக்க பணம் மற்றும் நில பத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 31 May 2024

ராஜபாளையத்தில் ஒரே பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்த வீடுகளில் 16 சவரன் தங்க நகை ரொக்க பணம் மற்றும் நில பத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 


ராஜபாளையத்தில் ஒரே பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்த வீடுகளில் 16 சவரன் தங்க நகை ரொக்க பணம் மற்றும் நில பத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள பாரதி நகர் 7 வது தெருவைச்  சேர்ந்தவர் கணேசன். காரைக்காலில் உள்ள மத்திய அரசின் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றும் இவர் மனைவி விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார்.

இவரது மகன் வினோத்குமார் உயிரிழந்து விட்டார். இவரது மகள் வினோதினி தற்போது சென்னையில் கணவர் அருண்குமார் உடன் வசித்து வருகிறார். தனது மகளை பார்ப்பதற்காக மனைவியை அழைத்துக்கொண்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கணேசன் சென்னைக்கு சென்று விட்டார்.

வீட்டின் வெளிப்பகுதி மற்றும் சுற்றுப்புறத்தை அதே பகுதியைச் சேர்ந்த வேலம்மாள் என்ற பெண்மணி தினமும் சுத்தப்படுத்தி வந்துள்ளார். இன்று வழக்கம் போல அவர் வேலைக்கு வந்த போது வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது. கதவை பூட்டி இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கீழே கிடந்துள்ளது.

இதை பார்த்த வேலம்மாள் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பது தெரிய வந்தது. கணேசனிடம் தொலைபேசியில் விசாரித்த போது வீட்டின் உள்ளே 100 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் குமார் என்பவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது மனைவி அர்ச்சனா தனது மகளுடன் வீட்டில் இருக்கிறார். நேற்று உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக சென்ற அவர் அங்கேயே தங்கி விட்டார். இன்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 சவரன் தங்க நகைகள் மற்றும் நில பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

குமார் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் இரண்டு வீடுகளில் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்த இந்த துணிகர கொள்ளை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad