விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகநாதன் (46). இவரது மகள் தனலட்சுமி (19). இவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கண்டித்த சண்முகநாதன், மகள் தனலட்சுமியின் பாதுகாப்பு கருதி ராஜபாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு மகளை அனுப்பி வைத்தார்.
தாத்தா வீட்டில் சில நாட்கள் இருந்த தனலட்சுமி திடீரென்று அங்கிருந்து காணாமல் போனார். மகள் காணாமல் போன தகவலறிந்த சண்முகநாதன், அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவர் ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். சண்முகநாதன் புகாரில், தனது மகளை கூமாப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். வழக்குபதிவு செய்த போலீசார், காணாமல் போன இளம்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment