விருதுநகர் அருகே சிவகாசியில் நடைபெற உள்ள மின் கட்டண உயர்வுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ள உள்ளார். இதற்காக முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பாண்டியராஜன், உதயகுமார் உள்ளிட்டோர் சிவகாசியில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில் சிவகாசியில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தமிழக எதிர்கட்சித் துணைத் தலைவர் உதயகுமாரை அருப்புக்கோட்டை அதிமுக நகர செயலாளர் ம.க.சக்திவேல் பாண்டியன் தலைமையிலான அதிமுகவினர் நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக பேசினர். அப்போது அருப்புக்கோட்டையில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து உதயகுமார் கேட்டறிந்தார்.
இதில் அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அருப்புக்கோட்டை அதிமுக நகர் அலுவலகத்தில் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment