விருதுநகர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அருப்புக்கோட்டையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பெரியார் நகர் முனியப்பசாமி கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடைபெற்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோமதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து பயன் அடைந்தனர்.
மேலும் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு வீடாக சென்று கொசு புழுக்களை கண்டறியும் பணியும் நடைபெற்றது. பொதுமக்களை தண்ணீர் வைத்துள்ள பாத்திரங்களை மூடி வைக்குமாறும் அறிவுறுத்தினர். அதேபோல் நகராட்சி சுகாதார துறை சார்பில் வாகனம் மூலம் ஒவ்வொரு வீதியாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment