அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முன்பு சுமார் 35 ஆண்டு பழமையான பாபரத்தி மரம் உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மதிய உணவு இடைவேளையின் போதும் பேருந்துக்காக காத்திருக்கும் போதும் இந்த மரத்தின் நிழலில் நிற்பது வழக்கம். இந்த நிலையில் இன்று திடீரென இந்த மரத்தின் ஒரு பகுதி முழுவதும் முறிந்து அங்கு இருந்த போட்டோ கடை மற்றும் பெட்டிக்கடை உள்ளிட்ட ஜந்து கடைகள் முன்பகுதி சேதமானது.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தது. மேலும் மரம் முறிந்து விழுந்த போது மின் கம்பியும் சேர்ந்து அறுந்து விழுந்தது. மின் கம்பியில் மின்சாரம் பாய்ந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக மரம் முறிந்து விழுந்த நேரத்தில் அப்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மின் வாரிய பணியாளர்கள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்றது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் திடீரென மரம் முறிந்து விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சிறிது நேரம் பரபரப்புப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment