குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதி 40 மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கின. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 18 October 2022

குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதி 40 மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கின.

இராஜபாளையத்தில் நேற்று பெய்த மழையின் காரணமாக குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதி 40 மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கின.


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் திருவள்ளூர் நகர் அருகே உள்ள மதுரை வீரன் காலனி. பாபுஜி நகர் பகுதியில் மழை பெய்தால் மழைநீர் செல்வதற்கான ஓடைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது இதனால் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் இது குறித்து பலமுறை அரசு அதிகாரியிடம் புகார் அளித்தும் நிரந்தர தீர்வு இல்லை என அவர்களுக்கு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.


நேற்று பெய்த மழையின் காரணமாக பாபுஜி நகர் வழியாக செல்லக்கூடிய மழைநீர் செல்ல வழி இல்லாமல் மதுரை வீரன் காலனி வழியில் செல்வதால் அங்குள்ள 40 வீடுகளுக்கு  மழை நீர் செல்கிறது இது நல்ல பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் செல்ல முடியாமல் முழங்கால் அளவு தண்ணீரில் கடந்து செல்கின்றனர்


மண் சுவர்கள் இடிந்து விழுந்தும் மழை நீர் உள்ளே புகுந்ததால் வீட்டில் உள்ள குடியிருக்க  முடியாமல் அருகே உள்ள பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இராஜபாளையம் வட்டாட்சியர் மற்றும் ஆர்டிஓ உள்ளிட்ட நேரில் பார்வையிட்டு தற்காலிகமாக தண்ணீர் வெளியே செல்வதற்காக ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட சுவரே ஜேசிபி வைத்து இடித்து தண்ணீர் செல்ல வழி ஏற்பாடு செய்து உள்ளனர் .தீயணைப்புத் துறையினர் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர் இரவு நேரம் என்பதால் தண்ணீரை முழுவதுமாக வெளியேற்ற முடியவில்லை.


இப்பகுதியோட பொதுமக்களின் கோரிக்கை மழைநீர் செல்வதற்கு வாருகால் அமைத்தால் மட்டுமே  எங்களுக்கு தீர்வு கிடைக்கும். மாவட்ட நிர்வாகத்திடமும் பஞ்சாயத்து நிர்வாகமும் பலமுறை புகார் அளித்தோம் நடவடிக்கை எடுக்கவில்லை மேலப்பட்ட கரிசல் குளம் பஞ்சாயத்து உட்பட்ட இந்த பகுதியில் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளாக தவித்து வருவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.. 

No comments:

Post a Comment

Post Top Ad