அதிமுகவின் 51ம் ஆண்டு துவக்க விழா இன்று (17.10.2022) அதிமுகவினரால் உற்சாகமாக கொண்டாடபடுகிறது. இந்நிலையில் அருப்புக்கோட்டையில் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் அதிமுகவின் 51ம் ஆண்டு துவக்க விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தெற்கு ஒன்றிய செயலாளர் யோகா வாசுதேவன் ஆத்திபட்டி பகுதியில் அதிமுக கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு யோகா வாசுதேவன் தீபாவளி பரிசு வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment