அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் வடிவேல் (53) கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி சென்ற வருடம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் வடிவேல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று(16-10-2022) ஆத்திபட்டியில் உள்ள இறைச்சி கடைக்கு வேலைக்கு சென்ற வடிவேல் அங்கு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வடிவேல் மகன் சிவராம்(24) புகாரின்பேரில் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment