அருப்புக்கோட்டை ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்துவரும் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கணவரை இழந்து தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு வி.வி.ஆர் காலணி பகுதியைச் சேர்ந்த அந்தோணி ஜுடு என்பவர் மூதாட்டியின் வீட்டில் அத்துமீறி நுழைந்து மூதாட்டியின் கழுத்தை நெரித்துள்ளார்.
மேலும் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். மூதாட்டி சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் அந்தோணி ஜுடு மீது நேற்று (16-10-2022) வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment