மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியர் சங்கமான மூட்டா சங்கத்தின் பொன்விழா மாநாட்டையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் கால்பந்தாட்ட போட்டி கடந்த 15ம் தேதி துவங்கியது இந்த போட்டியில் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட கல்லூரிகளை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன இந்த போட்டிகளை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் துவக்கி வைத்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செயின்ட் ஜீட் கல்லூரி அணி முதலிடத்தையும் திருநெல்வேலியைச் சேர்ந்த M.D.T ஹிந்து கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா தேவாங்கர் கலை கல்லூரி வளாகத்தில் நேற்று (16-10-2022) நடைபெற்றது. இந்த அணிகளுக்கு மூட்டா சங்கத்தின் பொறுப்பாளர்கள் தேவாங்கர் கல்லூரி ஆசிரியர்கள் இணைந்து பரிசுகளை வழங்கினர்.
No comments:
Post a Comment