தீபாவளி பொருட்கள் வாங்க செல்லும்போது கவனம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 17 October 2022

தீபாவளி பொருட்கள் வாங்க செல்லும்போது கவனம்.

விருதுநகர் மாவட்டம்: அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகிய ஊர்களில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பஜார் பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. 

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் பண்டிகை காலத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க செல்லும்போது தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளவேண்டும்.


கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்லும் போது அதிக அளவு தங்க ஆபரணங்கள் அணிவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்களது செல்போன், பணம், நகை, ஆகியவற்றை மர்ம நபர்கள் திடுடிச்செல்ல வாய்ப்புள்ளது எனவும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad