இதன் துவக்கவிழா, காரியாபட்டி கள்ளிக்குடி சாலையில் நடைபெற்றது, பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். கிரீன் பவுண்டேசன் நிறுவனர் பொன்ராம் வரவேற்றார். தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இல்லத்தரசிகள், மற்றும் குழந்தைகளிடம் மரக்கன்றுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பேரூராட்சி துணைத்தலைவர் ரூபி சந்தோசம், ஒன்றிய திமுக செயலாளர்கள் செல்லம், கண்ணன், பேரூராட்சிக் கவுன்சிலர்கள் வசந்தா, சரஸ்வதி, முகமது முஸ்தபா, சங்கரேஸ்வரன் , எஸ்.பி. எம்.டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, கிரீன் பவு ண்டேசன் நிர்வாக இயக்குனர் ராணி, ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், சமுத்திரம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மங்களேஸ்வரி வழக்கறிஞர் செந்தில்குமார், மனித பாதுகாப்பு குழு நிர்வாகி பிரின்ஸ் நுகர்வோர் பாதுகாப்பு குழு அமைப்பாளர் செல்வகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர், மேலும் ,கிரின் பாண்டேன் நிறுவனர் கூறியதாவது:
தமிழக முதல்வரின் உன்னதமான பசுமை தமிழகம் திட்டத்தை காரியாபட்டி வட்டாரத்தில் முழுமையாக செயல்படுதத்தப்படும். பேரூராட்சி வார்டு கரன்சிலர்கள் ஒத்துழைப்போடு வாரம் ஒரு நாள் விடுமுறை தினத்தன்று வீடுகள் தோறும் மக்களை சந்தித்து மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். கிரீன் பவுண்டேசன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment