மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது உஜ்ஜயினி திருத்தலம் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான இங்குதான் உலக புகழ்பெற்ற மகா காளேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. புராணச்சிறப்பும் பழமையும் வாய்ந்த இந்த கோயிலில் சுமார் ரூ 316 கோடி செலவில் முதற்கட்ட திருப்பணிகள் நடைபெற்று தற்போது முடிவுக்கு வந்ததுள்ளன இதையொட்டி பிரதமர் மோடி இந்த கோயிலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் சுப்புராஜ் திருமண மண்டபத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சியில் நகர பாஜக தலைவர் முருகானந்தம் தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னால் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment