விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரத் துறை அலுவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அருப்புக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நகராட்சி சுகாதாரத் துறை சார்பில் நகர் முழுவதும் கொசு புகை அடிக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நகராட்சி பணியாளர்கள் ஒவ்வொரு வீதியாக வாகனங்கள் மூலமும் நடந்தும் சென்று புகை அடித்து செல்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு வீடாக சென்று கொசு புழுக்களை கண்டறிந்து அழிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment