அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியை சேர்ந்தவர் விஜயலட்சுமி இவர் தங்க தாமரை என்ற மகளிர் குழுவின் தலைவியாக உள்ளார். இதேபோல் மரியா தேவி என்பவர் மகரம் குழுவிற்கு தலைவியாகவும் லட்சுமி என்பவர் கணிமலர் குழுவிற்கு தலைவியாகவும் உள்ளனர். இந்த மூன்று குழுவிலும் 30 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இந்த மூன்று குழுவிற்கும் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மகளிர் சுய உதவிக்குழு நிதி நிறுவனத்தில் கடன் பெற்றதாகவும் அந்த கடனை முழுமையாக கட்டி விட்டதாகவும் அதற்கு தடையில்லா சான்று கேட்டபோது அந்த நிதி நிறுவனத்தின் மேலாளர் மேலும் நீங்கள் பணம் கட்ட வேண்டும் இல்லை என்றால் கூடுதலாக லோன் வாங்க வேண்டும் என்று கூறியதாகவும் தடையில்லா சான்று வழங்க முடியாது என கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த மூன்று குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் இன்று துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி சகாயகோஸை நேரில் சந்தித்து நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தடையில்லா சான்று பெற்று தர வேண்டும் என்று மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட டிஎஸ்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
No comments:
Post a Comment